Friday, October 15, 2010

லஞ்சம் ஒழிப்பது பணி ., ஆனால் செய்தது லஞ்சம் வாங்குவது., இப்படியும் ஒரு இன்ஸ்பெக்டர்

 பணியில் பல விதம் உண்டு போலீசார் பாதுகாப்பது என்றால் அவர்களே சில நேரங்களில் பழிகாரனாக மாறுவதும் உண்டு. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்காரனாக இருக்க வேண்டியவன் திருடனாக மாறிய கதை மதுரையில் நடந்திருக்கிறது. போலீசில் பல பிரிவுகள் உண்டு போலீசுக்கே போலீஸ் இருப்பதுபோல நமது நாட்டில் பல பிரிவு கண்காணிப்பில் உண்டு . ஆனால் இந்த போலீசே குற்றவாளியாக நிறுத்தப்படுவது தலைக்குனிவான விஷயம் தான்.
தமிழகத்தில் முதல் ஆளாக கைதானவர் :  லஞ்சத்தை ஒழிக்க வேண்டி பணியாற்ற வேண்டியவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது 

செய்யப்பட்டுள்ளார் என்பது கொஞ்சம் நெருடலான ஹைலைட். மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் பெருமாள்பாண்டி. இவர் ஒரு டாக்டரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனை கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் பெருமாள்பாண்டியை எலிக்கு மருந்து வைத்தாற்போல கச்சிதமாக பிடித்தனர். இப்போது பெருமாள் பாண்டி போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக அமர்த்தப்பட்டார். போலீசார் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது உண்டு ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் முதன்முறை.காலை 11 மணி அளவில் நிருபர்களிடம் போலீசார் முழு விவரங்கள் தெரிவித்தனர். 



நடந்தது என்ன ? : மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் அசோகக்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக சொõத்து சேர்த்ததாக புகார் வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டி டாக்டரை மிரட்டியுள்ளார். இவரது உறவினர் நமச்சிவாயம் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை பார்மசிஸ்டாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மூலம் டாக்டருக்கு லஞ்சம் கேட்டு இன்ஸ்பெக்டர் தூது அனுப்பியுள்ளார்.



ரூ. 5 லட்சம் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு முதல் தவணையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்க டாக்டர் ஒத்துக்கொண்டார். அண்ணாநகரில் உள்ள கிளினிக்கிற்கு நமச்சிவாயம் வரவழைக்கப்பட்டார். இவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார் நமச்சிவாயத்தை கைது செய்தனர். தொடர்ந்து தகவல் உறுதி செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டி கைது செய்யப்பட்டார்.ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது., தொடர்ந்து சி.ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் 12 ம் தேதி வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.



லஞ்ச ஒழிப்பில் பணியாற்ற தகுதிகள் :  லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரிவில் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் போஸ்டிங் கிடைக்காது. யார் விருப்பப்படுகிறார்கள் ? உண்மையில் விருப்பம் உள்ளவர்தானா, நேர்மையானர்தானா, நேர்மையாக இருந்தாலும் பார்சியாலிட்டி பார்க்காதவரா என ஒரு பிரிவிவினர் விருப்பம் தெரிவித்த போலீசாரை மறைமுகமாக கண்காணிப்பர் . பின்னர்தான் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவார். அப்படி இருந்தும் இந்த பெருமாள்பாண்டி எப்படி பசும்தோல் போர்த்திய புலியாக இருந்தார் என்பது தான் தற்போதைய கேள்வி.  

No comments:

Post a Comment

பொணத்தின் வாயில் இருக்கும் அரிசியை நொன்டி தின்னும் நல்லவர்கள்